செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2017 (17:14 IST)

ஜெயலலிதா மரணம், திமுக தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறது: தினகரன் ஆவேசம்!

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து ஆர்கே நகர் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தரம் தாழ்ந்த அரசியல் செய்வதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
 
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அனைத்து கட்சியினரும் முனைப்புடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணப்பட்டுவாடா தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்தாலும், தேர்தல் களம் அனல் பறக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் திமுகவை கடுமையாக சாடியுள்ளார்.
 
செய்தியாளர்களை சந்தித்த தினகரன், ஜெயலலிதா மரணம் குறித்து திமுக வேண்டுமென்றே பொய்யான தகவல்களையும், சந்தேகங்களையும் அரசியல் பரபரப்புக்காக பரப்பி வருகிறது. இந்த விஷயத்தில் திமுக தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறது. 70 ஆண்டுக்கும் மேலான ஓர் அரசியல் இயக்கம் இவ்வாறான அரசியலில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது என்றார் அவர்.