1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2017 (14:45 IST)

சங்கர் கொலையில் 6 பேருக்கு தூக்கு: டாக்டர் கிருஷ்ணசாமி, பாலபாரதி கருத்து

தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய உடுமலை சங்கர் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு தூக்குத்தண்டனை விதித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து புதியதமிழக கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் பாலபாரதி ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:
 
டாக்டர் கிருஷ்ணசாமி: இதுபோன்ற ஆணவ கொலையை தடுக்க இந்த மாதிரி கடுமையான தண்டனைகளுடன் கூடிய தீர்ப்பை தவிர வேறு வழியில்லை. இந்த தீர்ப்பு தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியாக இருக்கும். ஒரு பெண் ஒரு இளைஞரை காதலிப்பதில் பெற்றோருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் கூலிப்படையை வைத்து கொலை செய்யும் அளவிற்கு மனிதாபிமானம் இல்லாமல் இருப்பதை கட்டுப்படுத்த நிச்சயம் இதுபோன்ற தண்டனையை கொடுத்தே ஆகவேண்டும்
 
பாலபாரதி: எதிர்காலத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்க இந்த தண்டனை உதவும்