1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2017 (15:07 IST)

சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு குறித்து சர்ச்சைக்குரிய டுவீட்: இணையதளத்தில் பரபரப்பு

உடுமலை சங்கர் கொலை வழக்கில் சங்கரின் மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட ஆறு பேர்களுக்கு நீதிமன்றம் அதிரடியாக தூக்கு தண்டனை வழங்கியதை பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர். ஜாதி அரசியல் செய்யும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட அனைத்து தரப்பினர்களும் இந்த தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் டுவிட்டரில் ஒரு நபர் இந்த தீர்ப்பு குறித்து சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
பொன்குமார் கொங்கு என்ற அந்த நபர் தனது டுவிட்டரில், 'மக்களே இனியாவது கேமரா இல்லாத இடமா பாத்து செஞ்சு விடுங்க இப்ப பாருங்க கண்டவன்லாம் பேசறான் .எது எப்படியோ செஞ்சது சந்தோஷம் தான் .என்ன போய் தண்டனை மனசு தளராதிங்க அடுத்த சம்பவத்துக்கு தயாராகுங்க' என்று கூறியுள்ளார்
 
இந்த பதிவுக்கு டுவிட்டர் பயனாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த பதிவை செய்த நபர் பாஜகவை சேர்ந்தவர் என்பது அவருடைய மற்ற டுவீட்டுகளில் இருந்து தெரியவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.