திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2017 (16:17 IST)

ஆர்கே நகரில் அடி, உதை: பணப்பட்டுவாடா செய்த காரை பத்திரமாக அனுப்பி வைக்கும் காவல்துறை (வீடியோ இணைப்பு)

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றது. இதில் அதிக அளவில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக அனைத்து கட்சியினரும் மாறி மாறி புகார் அளிக்கின்றனர்.
 
இந்நிலையில் ஆர்கே நகரில் அதிமுக அமைச்சர் வீரமணியின் உதவியாளர் காரில் பணப்பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது. அந்த பணப்பட்டுவாடா செய்த காரை மறிப்பவர்களை அடித்து, உதைத்து காரை காவல்துறையினர் பத்திரமாக அனுப்பி வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆர்கே நகரில் நேற்று TN 59 DQ 4777 என்ற பதிவெண் கொண்ட வாகனத்தில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தகவல் கிடைத்து, தேர்தல் செலவினப் பார்வையாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அவர் வாகனத்தை சோதனை செய்து பறிமுதல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
 
TN 59 DQ 4777 என்ற பதிவெண் கொண்ட அந்த காரின் உள்ளே அமைச்சர் தங்கமணியின் உதவியாளர் இருந்தார். மேலும் காரின் உள்ளே பணம் இருந்தது என்று உறுதியான தகவலும் வந்தது. இதனையடுத்து அந்த காரை சிலர் மறித்தனர். ஆனால் காரை மறிப்பவர்களை அடித்து உதைத்து, காரை பத்திரமான அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறைனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.