திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2017 (10:21 IST)

எடப்பாடி அணிக்கு தாவும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்...

தினகரன் பக்கம் இருக்கும் எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோர் விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி பக்கம் விரைவில் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


 
தற்போது தினகரன் பக்கம் மொத்தம் 18 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் அவர் பக்கம் இருந்த அதிமுக எம்.பி.க்களான விஜிலா சத்யானந்த், நவநீத கிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன் ஆகியோர் எடப்பாடி அணியுடன் இணைந்துவிட்டனர்.
 
அந்நிலையில், தினகரன் ஆதரவாளரான அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதியும், எடப்பாடி அணியுடன் விரைவில் இணைந்துவிடுவார் எனத் தெரிகிறது. இதுபற்றி நேற்று கருத்து தெரிவித்த அவர் “இரு அணிகளையும் இணைக்கும் நோக்கத்திலேயே முதல்வரை சந்திக்கவுள்ளேன்” எனக் கூறியிருந்தார்.
 
இரட்டை இலை சின்னம் எடப்பாடி பக்கம் சென்றுவிட்ட நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பக்கம் தாவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.