ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (12:43 IST)

திவாகரன் ஒரு பியூஸ் போன பவர் சென்டர் - டிடிவி தினகரன் கிண்டல்

சசிகலாவின் சகோதரர் திவாகரன் தன்னை பற்றி விமர்சனம் செய்ததற்கு டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

 
நேற்று தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன் “ மன்னார்குடியில் தினகரன் அணியினர் பொதுக்கூட்டம் போட்டுள்ளனர். அதில் பெண்களுக்கு குக்கர் டோக்கன்களை கொடுத்துள்ளனர். இதனால், பெண்கள் மாலை 3 மணிக்கெல்லாம் அங்கே சென்று காத்திருக்கின்றனர்” எனக் கூறினார்.
 
இந்நிலையில், மன்னார்குடி பொதுக்கூட்டத்தில் பேசிய தினகரன் “ திருப்பரங்குன்றம் தொகுதி எனக்கு சொந்த ஊரான மன்னார்குடி போன்றது. எனவே, அங்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். தினகரன் சிரித்துக்கொண்டே இருக்கிறான் என நினைக்க வேண்டாம். உங்கள் பினாமி ரகசியம் அனைத்தும் வெளியிடப்படும். மன்னார்குடியில் ஒரு பவர் செண்டர் இருந்தது. தற்போது அது பியூஸ் போகியுள்ளது” என திவாகரனை அவர் மறைமுகமாக குறிப்பிட்டார்.