1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (06:12 IST)

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும் பாடம் புகட்டுவோம்: டிடிவி தினகரன்

சமீபத்தில் நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளை சுயேட்சை வேட்பாளரான டிடிவி தினகரன் தோற்கடித்தார். குறிப்பாக இந்த தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ மரணம் அடைந்துள்ளதால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. இதனையடுத்து மன்னார்குடி பொதுக்கூட்டத்தில் தினகரன் பேசியபோது, 'திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஆர்.கே.நகர் தேர்தல்போல் சரியான பாடம் புகட்டுவோம் என்றும், திருப்பரங்குன்றத்தில் குக்கர் சின்னத்தில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்' என்றும் கூறியுள்ளார்.
 
ஆர்.கே.நகர் போல் திருப்பரங்குன்றம் தொகுதியிலும் அதிமுக, திமுக தோல்வி அடைந்தால் வரும் பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் இவ்விரு கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.