1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

எந்த தேர்தலிலும் போட்டியில்லை: திவாகரன் அதிரடி

ஒருபக்கம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் அடுத்ததாக திருப்பரங்குன்றம் தொகுதியையும் கைப்பற்றும் முயற்சியில் இருக்கும் நிலையில் அவரது உறவினரான திவாகரன் இன்னொரு பக்கம் நான் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளார்.
 
நேற்று தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திவாகரன், பதவியை பிடிப்பதற்காக தான் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றும், நான் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்றும் இருப்பினும் தனது கட்சியினர் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றும் கூறினார்.
 
மேலும் சிலைக் கடத்தல் வழக்கு உட்பட அரசின் ஒவ்வொரு செயலும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், இந்த விஷயத்தில் உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை என்றும் குறினார். 
 
மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தன்னிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை என்றும் விசாரணை ஆணையம் கேட்ட மற்ற கேள்விகளுக்கு தான் பதில் அளித்ததாகவும் திவாகரன் கூறியுள்ளார்.