1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (10:22 IST)

அவசரப்பட்ட அதிமுக... ஆதங்கத்தில் கூட்டணி கட்சிகள்!!

அதிமுக மீது தேர்தல் பிரச்சார விவகாரத்தில் கூட்டணி கட்சிகளான பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன என தெரிகிறது. 

 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக அதிமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தற்போது பிரசாரத்தையும் தொடங்கிவிட்டன என்பதும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாஜகவும் தேர்தல் களத்தில் இறங்கி தீவிரமாக பணி செய்து கொண்டிருக்கிறது. 
 
ஆனால், அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள், துணை முதல்வர் பதவி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசாமல், தன்னிச்சையாக பிரசாரத்தை தொடங்கியதால், கூட்டணி கட்சிகளான பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன என தெரிகிறது. அதிமுக தலைமை இதனை சரிசெய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.