திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 4 அக்டோபர் 2017 (15:43 IST)

ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தாரா தினகரன்?: திவாகரன் கேள்வி!

ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தாரா தினகரன்?: திவாகரன் கேள்வி!

சேலத்தில் தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் எதிராக துண்டுபிரசுரங்கள் விநியோகித்ததால் தினகரன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.


 
 
இந்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ ஒருவரை கைதுசெய்துள்ள நிலையில் காவல்துறையின் அடுத்த இலக்கு தினகரன் என கூறப்படுகிறது. தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தினகரனை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் தன்னை கைது செய்தால் செய்யட்டும், அதனை நீதிமன்றம் மூலம் சந்திக்க தயாராக இருப்பதாகவும், திருப்பி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நிச்சயம் எனவும் கூறினார் தினகரன். இதற்காக அவர் எந்த முன் ஜாமீனும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இது தொடர்பாக இன்று பேட்டியளித்த சசிகலாவின் தம்பி திவாகரன், தேசதுரோக வழக்கு போடும் அளவிற்கு தினகரன் என்ன ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து தற்போது கருத்து கூறும் அமைச்சர்கள் பதவியில் தொடர என்ன தகுதி இருக்கின்றது? எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு எதிராக கடிதம் அளிக்கவில்லை. முதல்வரை மாற்றம் செய்யதான் கடிதம் அளித்தார்கள் என திவாகரன் கூறியுள்ளார்.