திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 12 செப்டம்பர் 2020 (19:55 IST)

நீட் தேர்வு அச்சம்...ஆதித்யா என்ற மாணவர் தூக்க்கிட்டுத் தற்கொலை !

நாளை நீட் தேர்வு இந்தியா முழுவதும் தக்க பாதுக்காப்புடன் நடக்க இருந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.

சமீபத்தில் அரியலூர் மாவட்டம் எலந்தகுழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாளை நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் மதுரையைச் சேர்ந்த துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். அதனால் இந்த ஆண்டு மிகுந்த பயத்துடனே படித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று படித்துக் கொண்டிருந்த போது தனது அறையிலேயே தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் உள்ள அனைவரையும் பாதித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் மற்றொரு மாணவர் நீட் தேர்வு அச்சம் காணமாக தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த்க ஆதித்யா என்ற மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் ஜோதி ஸ்ரீதுர்கா நீட் தேர்வின் கடைசி மரணமாக இருக்க வேண்டுமென அவர் டுவிட் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் இன்னொரு மாணவர் மரணம் நிகழ்ந்துள்ளது அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது #Tamilnadu #NEETExam #Dharmapuri #ADHITYA #SUICIDE