ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2023 (15:44 IST)

பாமக போராட்டத்தில் வன்முறை: நெய்வேலி விரைகிறார் டிஜிபி..!

நெய்வேலியில் பாமக நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து நெய்வேலிக்கு டிஜிபி விரைவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
நெய்வேலி என்எல்சி அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பாமக தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாமக தொண்டர்கள் வன்முறை செய்தனர். 
 
போராட்டக்காரர்கள் கற்களை வீசியதில் போலீசார் காயம் அடைந்ததாகவும் தண்ணீரை பீச்சியடைத்து போலீசார் அவர்களை கலைத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் நெய்வேலியில் பதட்டம் ஏற்பட்டுள்ளதை அடுத்து டிஜிபி சங்கர் ஜிவால் சம்பவ இடத்திற்கு விரைகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் போலீசார் மீதும் போலீசார் வாகனம் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தற்போது 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசார் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
Edited by Mahendran