ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 28 ஜூலை 2023 (12:58 IST)

''5 கோடி கொடுத்தாலும் எங்களுக்குத் தேவையில்லை'' -அன்புமணி ராமதாஸ்

''5 கோடி கொடுத்தாலும் எங்களுக்குத் தேவையில்லை. என்எல்சி பிரச்சனை கடலூர் மாவட்டத்தில் பிரச்சனை இல்லை. இது தமிழ் நாட்டின் பிரச்சனை''என்று அன்புமணி ராமதாஸ்  கூறியுள்ளார்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின்  2 வது சுரங்கப் பணிகளுக்காக மேல்வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில்  சுரங்க விரிவாகப் பணிகளில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், கடலூரில் நடைபெற்று வரும் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை  கண்டித்தும்,என்.எல்.சி வெளியேற்றத்தை வலியுறுத்தியும் இன்று  முற்றுகை போராட்டம்!  நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிவித்திருந்தார்.

அதன்படி, பாமக சார்பில் இன்று   நெய்வேலியில் போராட்டம் நடந்து வருகிறது. இப்போராட்டில் பங்கேற்றுள்ள அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் , 5 கோடி கொடுத்தாலும் எங்களுக்குத் தேவையில்லை. என்எல்சி பிரச்சனை கடலூர் மாவட்டத்தில் பிரச்சனை இல்லை. இது தமிழ்நாட்டின் பிரச்சனை என்று கூறியுள்ளார்.

மேலும்,  இது நமது உரிமைக்கான பிரச்சனை, விவசாய பட்ஜெட் ஒருபக்கம் அறிவிக்கப்பட்டு, ஒருபக்கம் விவசாய நிலம் பிடுங்கப்படுகிறது. இதனை நிச்சயம் விடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.