வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2023 (13:24 IST)

பாமகவின் முற்றுகை போராட்டத்தின் எதிரொலி: மூடப்பட்டது டாஸ்மாக் கடைகள்..!

என்எல்சி விவகாரம் காரணமாக பாட்டாளி மக்கள் கட்சி இன்று போராட்டம் நடத்தி வரும் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
விளைநிலங்களை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தியதன் காரணமாக கண்டனம் தெரிவித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று பாமகவினர் என்எல்சி அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக டாஸ்மார்க் நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என்றும் டாஸ்மாக்  நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran