திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 25 மார்ச் 2024 (08:44 IST)

பெளர்ணமி அன்று திருச்செந்தூர் கடற்கரையில் தங்க வேண்டுமா? இணையத்தில் பரவும் தகவல்..!

கடந்த சில நாட்களாக பௌர்ணமி தினத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் படுத்து தூங்கி மறுநாள் காலை நாழி கிணற்றில் குளித்தால் அனைத்து துன்பங்களும் விலகிவிடும் என்று தகவல் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் நேற்றைய பௌர்ணமி தினத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளதாக தெரிகிறது.
 
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்ற நிலையில் சமீப காலமாக திருச்செந்தூர் கடற்கரையில் பௌர்ணமி தினத்தன்று படுத்து தூங்க வேண்டும் என்ற ஒரு தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஒரு சில திரை உலக மற்றும் அரசியல் பிரபலங்கள் இந்த கருத்தை தனது சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வருகை தந்ததாகவும் ஏராளமானோர் திருச்செந்தூர் கடற்கரையில் படுத்து தூங்கியதாகவும் தெரிகிறது.

திருச்செந்தூர் கடற்கரையில் பௌர்ணமி தின இரவில் படுத்து தூங்கி எழுந்தால் அனைத்து கஷ்டங்களும் நீங்கிவிடும் என்று சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் பக்தர்கள் அதன் மீது நம்பிக்கை வைத்து திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva