வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (09:06 IST)

சதுரகிரி பவுர்ணமி யாத்திரைக்கு தடை! – பக்தர்கள் அதிர்ச்சி!

sathuragiri
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி மலைக் கோவிலுக்கு பவுர்ணமி யாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சதுரகிரி வனத்துறை கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மலைப்பகுதியில் உள்ள சுந்தரமகாலிங்கம் சுவாமி மலைக் கோவிலுக்கு பக்தர்கள் மாதம்தோறும் பவுர்ணமி மற்றும் பிரதோஷம் நாட்களில் பாத யாத்திரை செல்வது வழக்கமாக உள்ளது.

இதற்காக ஒவ்வொரு மாதமும் யாத்திரைக்காக வனத்துறை 4 நாட்கள் வரை அனுமதி அளிக்கும். இந்த மாதம் ஆடி பவுர்ணமி வரும் 11ம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக மலைக்கோவில் செல்ல பக்தர்கள் தயாரான நிலையில் வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதாலும், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் சதுரகிரி யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், பவுர்ணமி வியாழக்கிழமை அன்று பக்தர்கள் சதுரகிரி செல்லும் வனத்துறை சாலையில் குவிய வேண்டாம் என்றும் வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இது பக்தர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.