சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல தடை: பக்தர்கள் சோகம்!
சபரிமலை மாலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை என்ற அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில் பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
இதனை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் சன்னிதானத்தில் உள்ள அனைத்து பக்தர்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் பத்தினம்திட்டா உள்பட 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சபரிமலை கோவிலில் பக்தர்கள் அனுமதி இல்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது