1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Devotees allowed four days to Sathuragiri

சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி! ஆனால் ஒரு நிபந்தனை..

sathuragiri
சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி! ஆனால் ஒரு நிபந்தனை..
விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் வைகாசி பௌர்ணமி தினத்தை ஒட்டி சதுரகிரி கோவிலுக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் சதுரகிரி கோவிலுக்கு அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழைபெய்தால் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
விருதுநகர் மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் மழை பெய்யும் நேரத்தில் சதுரகிரி மலையேறுவது ஆபத்தானது  என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?