1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 31 மார்ச் 2021 (09:02 IST)

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா?

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமானை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

 
ஆம், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமானையொட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி, 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். 
 
காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் நேரடியாக மழைக்கு வாய்ப்பில்லை. மேலும், வங்க கடலின் தெற்கு பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.