தொடர்புடைய செய்திகள்
- அதிமுக கூட்டணியில் அன்புமணி, ராமதாஸ் இருவருமே இடம்பெற வாய்ப்பு உண்டா? அமித்ஷா நினைத்தால் நடக்கும்..!
- பொங்கல் பரிசு!.. திமுக கேட்டது 5 ஆயிரம்.. கொடுத்தது 3 ஆயிரம்!.. ஒரு பிளாஷ்பேக்!...
- அதிமுக - திமுக.. யார் ஓட்டுக்களை அதிகம் பிரிக்கிறார் விஜய்? சமீபத்திய கருத்துக்கணிப்பு..!
- அதிமுக, திமுக, தவெக மும்முனை போட்டியில் தொங்கு சட்டமன்றத்திற்கு அதிக வாய்ப்பு: பிரபலங்கள் கணிப்பு..!
- எங்களுக்கு ஏன் பதவி கொடுக்கல?.. செங்கோட்டையனிடம் கேள்வியெழுப்பிய தவெகவினர்....
2022 முதல் 2026 வைர!.. தமிழக அரசு கொடுத்த பொங்கல் பரிசின் விபரம்!....
தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக திமுக எவ்வளவு பணம் கொடுக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே அதிமுகவும், திமுகவும் பொங்கல் தொகுப்போடு சிறப்பு தொகையும் கொடுத்து வருகிறது..
இந்நிலையில்தான் பொங்கல் பரிசாக அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்போடு 3 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது அறிவித்திருக்கிறார். அதோடு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,ஒரு முழு நீள கரும்பு மற்றும் வேஷ்டி, சேலை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், திமுக பொறுப்பேற்றதிலிருந்து அதாவது 2021ம் ஆண்டு முதல் 2026 வரை பொங்கல் பரிசாக என்னென்ன கொடுத்தார்கள் என்ற விபரத்தை பார்ப்போம்:
2002ம் வருடம் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் கொண்ட தொகுப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் பணம் கொடுக்கவில்லை. 2023ம் வருடம் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் கரும்பு கொடுக்கப்பட்டது. அதேபோல் அரிசி அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் பணம் கொடுத்தார்கள்.
2024ம் வருடம் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு மற்றும் 1000 ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. 2025ம் வருடம் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு கொடுக்கப்பட்டது. ஆனால் பணம் கொடுக்கப்படவில்லை. இந்த வருடம் பொங்கல் தொகுப்போடு 3 ஆயிரம் ரூபாய் பணம் கொடுப்பதாக திமுக அரசு அறிவித்திருக்கிறது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் வருவதால்தான் திமுக அரசு 3 ஆயிரம் ரூபாய் கொடுத்திருப்பதாக அதிமுக பேச துவங்கியிருக்கிறது.