1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Delta districts have orange alert of rain fall

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்கள் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் பருவமழை இரண்டு மடங்கு அதிகமாக பெய்யலாம் என கூறப்படுகிறது. இன்று கனமழை காரணமாக 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அரபிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
மீண்டும் தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு: தமிழக அரசு திட்டம்!