1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Deepa yet to Campaign in Auto at RK Nagar

தீபா ஆட்டோவில் பிரச்சாரமா? அதிர்ச்சியில் தொப்பி

தீபா
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள தீபா நாளை முதல் தீவிரமாக அனல் பறக்கும் பிரச்சாரம் செய்ய உள்ளார். அவர் ஆட்டோவில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபா, மதுசூதனன், தினகரன் என மூன்று பேரும் வெற்றிப் பெற கடுமையாக போட்டியில் ஈடுப்பட்டுள்ளனர். மறுபக்கம் திமுக அதிமுக-வை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என களமிறங்கி உள்ளது.
 
இவர்களை தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, கங்கை அமரனை களமிறக்கி உள்ளது. தீபா முதன் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் நேற்று தாக்கல் செய்தார். நாளை முதல் அவர் பிரச்சாரத்தை தொடங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் தீபா ஆட்டோவில் பிரச்சாரம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
About Writer
Abimukatheesh
அடுத்த கட்டுரையில்
தீபாவின் வேட்புமனு ஏற்பு: தேர்தல் ஆணையம் அதிரடி!