1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Deepa is independent candidate in RK Nagar Election

தீபா சுயேட்சை வேட்பாளர்: அந்த பேரவையை இன்னமும் பதிவு செய்யவில்லையாம்!

தீபா சுயேட்சை வேட்பாளர்: அந்த பேரவையை இன்னமும் பதிவு செய்யவில்லையாம்!

தீபா
ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று நிறைவடைந்ததையடுத்து, அதனை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.


 
 
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா வேட்புமனுத் தாக்கல் செய்தார். இவரது வேட்புமனுவில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக கூறப்படுகிறது. அவரது கணவரின் பெயரை குறிப்பிடாமல் ஜெயகுமாரின் மகள் என்று தான் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் கணவரின் வங்கிக்கணக்கு உள்ளிட்ட அவரது சொத்து விவரங்களுக்கு பதில் அளிக்காமல் ஏதுமில்லை என்று தான் குறிப்பிட்டுள்ளார்.
 
தீபா சில வாரங்களுக்கு முன்னர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்தார். அதன் சார்பாக தீபா போட்டியிடுவதாக கூறினார். ஆனால் தனது வேட்புமனுவில் தான் சுயேட்சை வேட்பாளர் என்று தான் குறிப்பிட்டுள்ளார். இதற்கு காரணம் அவர் தனது பேரவையை இன்னமும் பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.
About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
தீபா ஆட்டோவில் பிரச்சாரமா? அதிர்ச்சியில் தொப்பி