1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2018 (11:09 IST)

மாதவனை நான்கு நாட்களாக காணவில்லை ; அது சகஜம்தான் : அதிர்ச்சி கொடுக்கும் தீபா

தன்னிடம் சண்டை போட்டுக் கொண்டு மாதவன் வீட்டை விட்டு செல்வது அடிக்கடி நடக்கும் நிகழ்வு என ஜெ.வின் அண்ணன் மகள் தீபா பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

 
தீபாவிற்கும் அவரது கணவர் மாதவனுக்கு அடிக்கடி கருத்து வேறுபாடு எழுவதாகவும், அதற்கு டிரைவர் ராஜாதான் காரணம் என தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும், மாதவனை, ராஜா ஒருமையில் திட்டும் வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்நிலையில்தான், தீபாவின் வீட்டில் போலி வருமான வரித்துறை அதிகாரி நுழைந்த விவகாரத்தில் மாதவன் பெயர் அடிபட்டது. ஆனால், இதுபற்றி மாதவன் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.  மேலும், அவர் தலைமறைவாகிவிட்டார் எனவும் செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தீபா மனம் திறந்து பேசினார். அப்போது “ நான் ராஜாவின் கட்டுப்பாட்டில் இல்லை. ராஜாவிடம் கட்டளையிட்டு வேலை வாங்குவது போல், மாதவனிடம் வேலை வாங்க முடியாது. அவர் வீட்டிற்கு வந்து 4 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால், இது அடிக்கடி நடக்கும் ஒன்றுதான். இது எனக்கு புதிதல்ல. நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன். அதிமுகவை அபகரிப்பது என் நோக்கமல்ல. நான் ஜெ. ஆக முடியாது” என அவர் பேசினார்.