இந்தியாவையே உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

hasini
Last Updated: திங்கள், 19 பிப்ரவரி 2018 (08:16 IST)
தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய ஹாசினி என்ற சிறுமியை கொலை செய்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.
சென்னையை சேர்ந்த தஷ்வந்த் என்பவன் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தன்னுடைய பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஹாசினி என்ற 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து சிறுமியின் உடலையும் எரித்ததாக அவன் மீது வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த கொடூர சம்பவத்தில் சிக்கிய போதிலும் இடையில் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த், பெற்ற தாயை பணத்திற்காக கொலை செய்து மும்பைக்கு தப்பிவிட்டான். இந்த நிலையில் தனிப்படையினர் மும்பை சென்று தஷ்வந்தை பிடித்து வந்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
 
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த ஹாசினி கொலை வழக்கின் வாத,பிரதிவாதங்கள் முடிந்து தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. சிறுமியை கொலை செய்த தன்ஷ்வந்துக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை அறிய தமிழகமே காத்திருக்கின்றது.


இதில் மேலும் படிக்கவும் :