1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2017 (14:01 IST)

தானா சேர்ந்த கூட்டம் அல்ல - தினகரனை கலாய்த்த தீபா

தானா சேர்ந்த கூட்டம் அல்ல - தினகரனை கலாய்த்த தீபா
நீட் தேர்விற்கு எதிராக திருச்சியில் தினகரன் தலைமையில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. 


 

 
இக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அக்கூட்டத்தில் ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான பல கருத்துகளை தினகரன் தெரிவித்தார்.
 
இந்நிலையில், நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் இல்லத்திற்கு செல்வதற்காக, ஜெ.வின் அண்ணன் மகள் தீபா இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, தினகரன் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற கூட்டம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
 
அதற்கு பதிலளித்த தீபா “திருச்சியில் தினகரனுக்கு கூடிய கூட்டம், தானா சேர்ந்த கூட்டம் அல்ல. அது பணம் கொடுத்து திரட்டிய கூட்டம். எங்களிடம் பொதுக்கூட்டம் நடத்தும் அளவுக்கு பணம் இல்லை. ஆனாலும், மக்கள் பிரச்சனைகளை முன்னெடுத்து போராடுவோம்” என தெரிவித்தார்.