1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Deep Depression in one place for hours

வந்தோமா போனோமானு இல்லாம... ஒரே இடத்தில் ரவுண்ட் அடிக்கும் வலுவிழந்த புரெவி!!

puravi cyclone
வலுவிழந்த புரெவி புயல், நீண்ட நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதாக தகவல். 
 
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புரெவி புயல், நீண்ட நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால் கனமழை தொடர அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், வலுவிழந்த புயலின் தற்போதைய நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 
 
தகவலின் படி ஆழ்ந்த தாழ்வு மண்டலம் ராமநாதபுரத்திற்கு 40 கீமி, பாம்பனுக்கு 70 கீமி, குமரிக்கு 60 கீமி தொலையில் நகராமல் மையம் கொண்டுள்ளது. பல மணி நேரமாக அதே இடத்தில் இருப்பதால் மழை நீடிக்க அதிக வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
தீனி திண்பதற்கே பாஜக எம்.பிக்கள் லாயக்கி: காங். பிரமுகர் ஆவேசம்!