1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. The protest… DMK to deceive people - H. Raja Dwight

எதிர்ப்பு போராட்டம்…. மக்களை ஏமாற்றும் திமுக – ஹெச்.ராஜா டுவீட்

DMK
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு திமுக உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சென்னை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மது விற்பனை தொடங்குவதற்கு எதிராக திமுக அறிக்கை விடுத்துள்ளது.

அதன்படி தமிழ்காத்தில் மது கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கருப்பு சின்னம் அணிய வேண்டும். 5 பேருக்கு மிகாமல் 15 நிமிடங்களுக்கு தங்களது வீடுகளுக்கு வெளியே மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதன்படி இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் தனது வீட்டு வாசலில் கருப்பு சட்டை அணிந்து வந்து நின்றார். அவரோடு இளைஞட் அணி செய்ளாலர் உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின் மனைவி துர்கா ஆகியோரும் வந்து நின்றனர்.

இதுகுறித்து  பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்டாலின் தனது குடும்பத்தாருடன் சாலையில் நிற்பது போன்ற படத்துக்கு வந்த மீம்ஸ்-ஐ பார்த்ததில் பிடித்தது என பதிவிட்டுள்ளார்.

மேலும், தனது அடுத்த பதிவில், உற்பத்தி செய்து விற்பனை செய்வார்கள். ஆனால் எதிர்ப்பு போராட்டம். மக்களை ஏமாற்றும் திமுக என பதிவிட்டுள்ளார்.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
கல்லா கட்டிய டாஸ்மாக்...! இன்று ஒரே நாளில் ’மது விற்பனை’ எவ்வளவு தெரியுமா ?