வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 30 செப்டம்பர் 2024 (15:39 IST)

பிரியாணியில் செத்து கிடந்த பல்லி..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5-பேர் மருத்துவமனையில் அனுமதி.!!

Biryani
சென்னை கொருக்குப்பேட்டை அருகே பல்லி கிடந்த பிரியாணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள பிஸ்மி உணவகத்தில் சிக்கன் பிரியாணி வாங்கி சென்றுள்ளார். 

பிரியாணியை வீட்டில் இருந்த அனைவரும் பகிர்ந்து சாப்பிட்ட நிலையில், ராஜ்குமாரின் மனைவி சுவாதி மற்றும் அவரது இரண்டு மகன்கள் வாந்தி எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து பிரியாணியை சோதனை செய்து பார்த்தபோது அதில், இறந்த நிலையில் பல்லி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதன் பின்னர் ராஜ்குமார், அவரது மனைவி சுவாதி, இரண்டு மகன்கள் மற்றும் ராஜ்குமாரின் தாயார் ஜெயந்தி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.