வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2024 (15:33 IST)

பஞ்சாப் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி! 3 முறை மயங்கி விழுந்ததால் பரபரப்பு..!

bhagavandh man
"பஞ்சாப் மாநில முதல்வர் மூன்று முறை மயங்கி விழுந்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் தனது அலுவலகத்தில் மூன்று முறை மயங்கி விழுந்ததாகவும், இதனை அடுத்து, அவர் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.  இது ஒரு வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என்று முதல்வரின் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக, டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பஞ்சாப் முதல்வர் சிகிச்சை பெற்று வருவதாக வெளியான செய்திக்கு, முதல்வரின் உதவியாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். முதல்வரின் உடல் நலம் தற்போது சீராக இருப்பதாகவும், அவரது உடல் நலம் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஹரியானா மாநில தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கடந்த சில நாட்களாக முதல்வர் பகவந்த் மான் ஓய்வின்றி பிரச்சாரம் செய்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது."

Edited by Mahendran