சாமியாடிய பூசாரி; கோவிலுக்குள் சென்ற பட்டியலின மக்கள்! – திருமங்கலத்தில் ஆச்சர்யம்!
திருமங்கலம் அருகே உள்ள கருப்பசாமி கோவிலில் சாமி குறி சொன்னதையடுத்து பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் அருகே கொக்குளம் பகுதியில் பேக்காமன் கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் குறிப்பிட்ட சில சமுதாயத்தினர் மட்டுமே சென்று சாமி தரிசனம் செய்து வந்த நிலையில் தங்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பட்டியலின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சாமி வந்து ஆடிய பூசாரி கோவிலுக்குள் வருபவர்களை தான் பார்த்துக் கொள்வதாக குறி சொன்னதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து பல ஆண்டுகளாக கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத பட்டியலின மக்கள் உள்ளே சென்று வழிபட்டுள்ளனர்.