1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 15 ஜூன் 2022 (21:34 IST)

எரிவாயு சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்வு |

cylinder
எரிவாயு சிலிண்டருக்கான டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருவதை அடுத்து பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது எரிவாயு சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளது 
 
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளது என்றும், ஒரு சிலிண்டருக்கு இதுவரை 750 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனி 2,200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
 ஒரு சிலிண்டருக்கு டெபாசிட் தொகை 1500 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.