திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (09:01 IST)

வந்தாச்சு ஜூன்... சிலிண்டர் விலையில் ஏற்றமா? இறக்கமா?

ஜூன் மாதத்திற்கான காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது. 

 
ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் கடந்த மாதம் இரு முறை சிலிண்டர் விலை உயர்த்தபட்டது. இந்நிலையில் சென்னையில் ரூ.1018.50 காசு என சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையாகி வருகிறது. இதே போல சமையல் எரிவாயு சிலிண்டர் மட்டுமன்றி வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.2,507 என விற்பனை செய்யப்படுகிறது. 
 
இதனிடையே ஜூன் மாதத்திற்கான காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது. அதில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த மாத விலையிலேயே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. 
 
அதேநேரத்தில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கடந்த மாத விலையில் இருந்து ரூ.134 குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கடந்த மாதம் ரூ.2,507க்கு விற்கப்பட்ட வர்த்தக சிலிண்டர், நடப்பு மாதம் ரூ.103.50 குறைந்து, ரூ.2,373 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.