1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 19 மே 2022 (07:20 IST)

ஒரே மாதத்தில் மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

cylinder
ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் கடந்த ஒன்றாம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்டதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் 
 
இந்த நிலையில் ஒரே மாதத்தில் மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் 1018 ரூபாய் 50 காசு என சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்பட அனைத்து பொருட்களும் விலை ஏறி வரும் நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சமையல் எரிவாயு சிலிண்டர் மட்டுமன்றி வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையும் 8 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 2507 ரூபாய் என விற்பனை செய்து வருகிறது