1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. gas cylinder rate hiked

வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்வு: ரூ.1000க்கும் அதிகமாக சென்றதால் அதிர்ச்சி!

gas
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இன்று வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருப்பது இல்லத்தரசிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சற்று முன் வெளியான தகவலின்படி வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இதுவரை சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை 965 என விற்பனையான நிலையில் தற்போது 1015 என விற்பனையாகிறது
 
வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டதால் ஆயிரத்துக்கும் அதிகமாக சிலிண்டர் விலை விற்பனையாவதால் இல்லத்தரசிகள் உள்பட பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?