1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Cyclone Nivar outer circle reach border

கரையை தொட்ட புயலின் வெளிப்பகுதி! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் அதன் வெளிப்புற பகுதி கரையை தொட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருமாறியுள்ளது. தீவிர புயலாக உள்ள நிவர் கரையை கடக்கும் முன்னர் அதி தீவிர புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கி விடியும் வரை புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நிவர் புயல் மணிக்கு 11 கி.மீ என்ற கணக்கில் கரையை நோக்கி நகரந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி நிவர் புயல் கடலூரிலிருந்து 120 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 130 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 150 கி.மீ தொலைவிலும் நெருங்கி வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் நிவர் புயலின் வெளி சுற்று பகுதி கரையை தொட்டுள்ளதாகவும், இதனால் காரைக்கால் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியோடு இணைக்க மத்திய அரசு ஒப்புதல்!