1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Customer attack a hotel servant for biriyani issue

லெக் பீஸ் இல்லாமலா சிக்கன் பிரியாணி தருவ?! – சப்ளையரை தாக்கிய வாடிக்கையாளர்!

Tamilnadu
சென்னை பூந்தமல்லி அருகே சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஆத்திரத்தில் கடை ஊழியரை வாடிக்கையாளர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பூந்தமல்லி அருகே கரையான்சாவடி அருகே பிரபலமான அசைவ உணவகம் உள்ளது. அங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர் சிக்கன் பிரியாணி வாங்கி சென்றுள்ளார். பிரியாணியில் லெக் பீஸ் இல்லாமல் சாதாரண கறி மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி தனது நண்பருடன் உணவகத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த சப்ளையர் ஒருவரையும் சரமாறியாக அறைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாடிக்கையாளர் தாக்கியது குறித்து காவல் நிலையத்தில் உணவக உரிமையாளர் புகார் அளித்துள்ளார். வாடிக்கையாளர் ஊழியரை அறையும் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு எழுந்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
எல்லா முக்கிய பிரச்சினையும் மென்சன் பண்ணுங்க! – தயாராகிறது திமுக தேர்தல் அறிக்கை!