1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Curfew extension in Tamil Nadu

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

Curfew extension
தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக குறைவது போலிருந்து தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
.
விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.
சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தமிழத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் 9 ஆகஸடு காலை 6 மணியுடன்  முடிவடைய உள்ளதால், கொரொனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்குத் தடை விதிக்கப்படுகிறது.  எனவே வரும் 23 -08 21 வரை இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும்12 ஆம் வகுப்புகளில் ஒரே நேரத்தில் 50%விழுக்காடு மாணவர்களுடன் கொரொனா தொற்றுக் குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளைத் திறக்கவு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்குரிய நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!