வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : திங்கள், 28 மே 2018 (14:10 IST)

என்எல்சி தொழிலாலர்கள் 25 பேர் விஷமருந்தி தற்கொலை முயற்சி

என்எல்சி தொழிலாலர்கள் 25 பேர் விஷமருந்தி தற்கொலை முயற்சி
நெய்வேலி என்எல்சி தொழிலாளர்கள் 25 பேர் தங்களின் பணி இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலையின் முன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பல ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களில் பலர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
 
இந்நிலையில் தங்கள் கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்டாததால், விரக்தியடைந்த தொழிலாளர்கள் 25 பேர் இன்று காலை 1ஏ சுரங்கம் முன் போராட்டம் நடத்தினர். அவர்கள் திடீரென தாங்கள் எடுத்து வந்த விஷத்தை அருந்தினர்.
என்எல்சி தொழிலாலர்கள் 25 பேர் விஷமருந்தி தற்கொலை முயற்சி

உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.