திங்கள், 19 ஜனவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2024 (07:48 IST)

ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
அஜித் இப்போது தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் நடந்து வருகிறது.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் அஜர்பைஜானில் தொடங்கியுள்ளது.

இதையடுத்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்த படத்தின் பூஜை சென்னையில் எளிமையாக நடந்ததாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்குள் அஜித் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு இந்த படத்தில் இணைவார் என சொல்லப்படுகிறது.