1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. annamalai wants to participae in local body election

ஆதரவு கவுண்ட் கூடிக்கிட்டே போகுதே!.. உள்ளாட்சி தேர்தலை குறிவைக்கும் அண்ணாமலை!...

annamalai
தமிழக பாஜக தலைவராக செயல்பட்டவர் அண்ணாமலை. இவர் தமிழக பாஜக தலைவராக இருந்தபோது தமிழகத்தில் பாஜகவின் வாக்கு எண்ணிக்கை அதிகரித்தது. ஏனெனில் தினமும் செய்தியாளர்களை சந்திப்பது, திமுகவை விமர்சிப்பது என பரபரப்பாக செயல்பட்டு வந்தார்.
 
ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பாஜக தலைவர் பதவி இவரிடமிருந்து பறிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. எனவே, பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருந்த அண்ணாமலை பாஜகவிலிருந்து வெளியேற முடிவெடுத்தார்.  சமீபத்தில் டெல்லி சென்ற அண்ணாமலை அங்கே அமிஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்தித்து கட்சியிலிருந்து விலகுவதற்கான காரணங்களை கூறினார்.
 
மேலும், The Movement belongs to the people என்கிற  இயக்கத்தையும் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோவையும் அண்ணாமலை நேற்று வெளியிட்டார். இந்நிலையில்,இந்த இயக்கத்தில் இதுவரை 12 லட்சம் பேர் இணைந்திருக்கிறார்கள். விரைவில் இந்த இயக்கத்தை புதிய கட்சியாக பதிவு செய்து, நிர்வாகிகளை நியமித்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அண்ணாமலை முடிவு செய்திருக்கிறார். மேலும் திறன் பயிற்சி பெறுவோருக்கு மட்டுமே பதவி கொடுக்கவும் அண்ணாமலை திட்டமிட்டிருக்கிறார்.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
ஆட்சிக்கு வந்துட்டோம்னு மிரட்டுறீங்களா?!.. செங்கோட்டையனிடம் கோபப்பட்ட பத்திரிக்கையாளர்கள்!..