1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Crows and dogs died in pumbuhar

சாலை முழுவதும் இறந்து கிடந்த காக்கைகள்! – பீதியில் மக்கள்!

Tamilnadu
தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சீர்காழியில் காகங்கள், நாய்கள் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் கொரோனா அச்சத்தால் வீடுகளை விட்டு வெளியேறாமல் அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சீர்காழி அருகே உள்ள பூம்புகாரில் காக்கைகளும், நாய்களும் சாலைகளில் ஆங்காங்கே இறந்து கிடப்பதாக சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு விரைந்த சுகாதார மற்றும் கால்நடை அதிகாரிகள் சுமார் 40 காக்கைகளையும், 3 நாய்களையும் இறந்த நிலையில் பறிமுதல் செய்துள்ளனர். அவை இறந்ததன் காரணம் குறித்து பரிசோதனை நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் இப்படி காக்கைகளும், நாய்களும் கூட்டமாக இறந்து கிடந்த சம்பவம் பூம்புகார் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
இப்போதைக்கு ஆயுதம் எதுவும் வாங்க வேண்டாம்! – முப்படைகளுக்கு கடிதம்!