1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India corona cases and death

23 ஆயிரத்தை தாண்டிய கொரோனா! ஆபத்தில் இந்தியா

India
இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 23,073 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் மாநில வாரியாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 6,427 ஆக உயர்ந்துள்ள நிலையில் 283 பேர் உயிரிழந்துள்ளனர். 283 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தொடர்ந்து டெல்லியில் 2,376 பேரும், குஜராத்தில் 2,624 பேரும், ராஜஸ்தானில் 1,734 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,659 ஆக உள்ளது. தமிழகம் 1,683 பாதிப்பு எண்ணிக்கையுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் கொரோனா பாதிப்பு மொத்தமாக 23,073 ஆக உள்ளது. 4,749 பேர் குணமடைந்துள்ள நிலையில் 718 பேர் உயிரிழந்துள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
இயற்கையில் கிடைக்கும் இந்துப்புவில் உள்ள மருத்துவ குணங்கள்...!!