1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Crime suspect accidently died in nature causes

விசாரணை கைதி சாவு – போலீஸ் மேல் சந்தேகம்

Crime
கடலூர் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவர் கார் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீஸார் கைது செய்திருந்தனர். கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அடைக்கப்பட்டிருந்த அவர் உடல்நல குறைவால் இறந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் உடல்நல குறைபாட்டால் உயிரிழந்தாரா அல்லது போலீஸ் தாக்கியதில் உயிரிழந்தாரா என்று அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அதனால் நாராயணன் உடல் மருத்துவ பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது உடல்நிலை சரியில்லாமல் போனதும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
அடுத்த கட்டுரையில்
ஜெயிச்ச உடனே வேலையை காண்பிச்சிட்டார் மோடி: உலக சுற்றுப்பயணம் ரெடி!