குளம், குட்டையில்தான் தாமரை மலரும் – கலாய்த்த திருமாவளவன்

thirumavalavan
Last Modified வெள்ளி, 24 மே 2019 (15:41 IST)
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகள் ஒரு தொகுதி தவிர அனைத்திலும் வெற்றி பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழத்துக்களை தெரிவித்தார் விசிக தலைவர் திருமாவளவன். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “மக்கள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அளித்த ஆதரவிற்கும், நம்பிக்கைக்கு நன்றி. சாதி மத வெறியர்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்து விட்டார்கள். தேசிய அளவில் எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ அது நடந்துவிட்டது. இந்துக்களின் எதிரியாக ராகுலை சித்தரித்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் அமைந்தது போல் இல்லாமல் பிற மாநிலங்களில் எதிர்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததால் வாக்குகளும் சிதறிவிட்டன. தாமரை வேண்டுமானால் குளம் குட்டைகளில் மலரலாம். ஆனால் தமிழ்நாட்டில் மலராது” என கூறினார்.இதில் மேலும் படிக்கவும் :