வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 2 மார்ச் 2024 (22:43 IST)

புதிதாக திருவோணம் தாலுக்கா உருவாக்கம்!

st  George port-tamilnadu
தமிழ்நாடு அரசு  இன்று புதிதாக திருவோணம் தாலுக்கா உருவாக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
 
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் மக்களுக்குத் தேவையான பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில்,  இன்று தமிழ் நாடு அரசு  இன்று புதிதாக திருவோணம் தாலுக்கா உருவாக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
 
தஞ்சை மாவட்டத்தில் புதிதாக திருவோணம் தாலுக்கா உருவாக்கப்பட்டுள்ளது. ஒரத்த நாடு, பட்டுக்கோட்டை தாலுகாக்களை சீரமைத்து திருவோணம்  உருவாக்கப்பட்டுள்ளதாகவும், காவாளப்பட்டி, சில்லத்தூர், திரு நெல்லூர்,வெங்கரை மற்றும் 45 வருவாய் கிராமங்களுக்கு திருவோணத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.