ஞாயிறு, 9 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 மார்ச் 2025 (12:52 IST)

அதிமுக உட்கட்சி பூசல்.. வீடியோ காலில் வந்து எச்சரித்த எடப்பாடியார்!?

2026 சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி, கட்சி உட்பூசல் குறித்தும் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. இந்நிலையில் அதிமுகவின் அடுத்தடுத்த ஆயத்த பணிகள் குறித்து அதிமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுடன் கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதிமுக கட்சி ரீதியாக பிரிக்கப்பட்ட 82 மாவட்ட நிர்வாகிகளுடனும் அவர் காணோலி வாயிலாக ஆலோசனை செய்தார்.

 

அப்போது அவர் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆலோசனைகளை வழங்கியதோடு, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்தும் பேசியுள்ளார். சமீபமாக அதிமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் இடையே ஏற்பட்டு வரும் பூசல்களை குறிப்பிட்டு பேசிய அவர். பூசல்களை களைந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K