வீலிங் செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் இளைஞர்கள் மீது புகாரளிக்க இலவச எண் அறிவிப்பு
வீலிங் செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் இளைஞர்கள் மீது புகாரளிக்க இலவச எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி சமயபுரத்தில் பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்து, பைக் சாகசத்தில் ஈடுபட்ட தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட சிலரை போலீஸார் தேடி வருவதாக தகவல் வெளியான நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 13 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
அதேபோல் அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்ததுதுறைக்கு போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர்.
இந்த நிலையில் வீலிங் செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் இளைஞர்கள் மீது புகாரளிக்க இலவச எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
9487464651 என்ற எஸ்பி அலுவலகத்தின் பிரத்யேக அலுவலத்திற்கு புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.