ஞாயிறு, 9 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 மார்ச் 2025 (13:09 IST)

மத்திய, மாநில அரசை கண்டித்து மீனவர்களை திரட்டி போராட்டம்! விஜய்யின் அடுத்த ப்ளான்!?

TVK Vijay

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண கோரி தமிழக வெற்றிக் கழகம் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

வங்க கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்துக் கொள்வதும், வலை உள்ளிட்ட மீன்பிடிப் பொருட்களை சேதம் செய்வது என்றும் தினம் தினம் தொல்லைக் கொடுத்து வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில், மாநில, மத்திய அரசு தலையீட்டின் பேரில் பின்னர் மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.

 

 

இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மீனவர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மீனவர்களை திரட்டி அவர்களுக்கான உரிமைகளுக்காக போராட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் மீனவர்களுடன் நடிகர் விஜய்யும் கலந்துக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

 

போராட்டத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது தொடங்கி மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து அவர் பேசுவார் என கூறப்படுகிறது. அடுத்த வாரத்தில் இந்த போராட்டம் ராமேஸ்வரம், நாகப்பட்டிணம் உள்ளிட்ட மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஓரிடத்தில் நடத்த திட்டமிட வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. 

 

Edit by Prasanth.K