1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (21:33 IST)

11 ஊழியர்களுக்கு சொகுசு கார் பரிசளித்த BBS நிறுவன ஓனர்!

BBS company
தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமான 11 பேருக்கு சொகுசு கார்களை கொடுத்துள்ளது பிரபல BBS  நிறுவனம்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஹர்சவர்தன் என்பவர் தன் 5 நண்பர்களுடன் இணைந்து தொடங்கிய  மென்பொருள் உற்பத்தி  நிறுவனம்  BBS  நிறுவனம்.

இந்த நிறுவனத்தில் 4 பேர் ஆரம்பகாலக்கட்டத்தில் பணியாற்றி நிலையில், தற்போது 450  ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில்,  நிறுவனத்திற்காக பணியாற்றி வரும் ஊழியர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமான இங்குப் பணியாற்றி வரும் 11 பேருக்கு சொகுசு கார்களை பரிசளித்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. உரிமையாளரின் செயல்லுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.